3 Aug 10

Addiperukku Prayers at the river

ஆடிபெருக்கு

மீண்டும் உங்களை படுத்த வந்திருக்கிறேன். இன்றைக்கு ஆடிப் பெருக்கு. நதி வழி நாகரீகத்தில் வளர்ந்த நமது க்லாசார பெருமைகளை நினைவுபடுத்துகிற நாள்.நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிற காலம். மக்கள் ஆற்று மணல்களில் உட்கார்ந்து பல்வேறு அன்னங்களை நிறையவே எடுத்துக் கொண்டு நதிக்கரையில் பகிர்ந்துண்ட காலம்.இதற்காகவே சில சடங்குகளையும் உண்டாக்கினார்கள். இந்த நாளில் ஆற்றுப் படுகையில் தாலி மாற்றி புதிதாக கட்டிக்கொண்டால், நீண்ட நாள் தாலி பாக்கியம் நிலைத்து நிற்கும் என்று நம்பினார்கள். திருமணமான் பெண்கள் ந்ல்ல மணாளனின் வரவையு எண்ணியும் ஆற்றில் அம்ர்ந்து பூஜை செய்து சாப்பிடுவதாகவும் நம்பிக்கை.

இவையெல்லாம் நதிக்கு செய்யவேண்டிய மரியாதையை ஒரு பயமான கட்டாயத்தோடு செய்ய வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்த புனையப்பட்ட பூச்சாண்டி கதைகளாகவே பார்க்கிறேன். இதையெல்லாம் விட மனிதர்கள் கூடினார்கள். பகிர்ந்துண்டார்கள். இயற்கையான நதியோடு தங்கள் வாழ்வியலை பகிர்ந்து கொண்டார்கள். கொடுத்து உண்கிற பழக்கதையும் வைத்தார்கள். இந்த ஆடிப்பெருக்கை பக்தி நோக்கு என்பதை விட மனிதர்கள் மகிழ்வோடு கூடுகிறார்கள் என்பது இன்றைக்கும் நமக்கு பெருமை அளிக்கிற விஷயம்’

காரணம் இன்றைக்கு மனிதர்கள் சுருங்குகிறார்கள். உலகமயமாக்கலின் வேகத்தில் ந்திகளை கூட தனியார்மயமாக்கும் சூழலில் எதிர்காலத்தில் ஆற்றோர ஆடிப்பெருக்கு என்பது ஒரு இதிகாச கதையாக கூட மாறுவதற்கு வாய்ப்புக்கள் உண்டு.அகண்ட ஆறுகள் சுயநல கூட்டத்தின் மணற் கொள்ளைகளால சுருங்கி போகும். மனிதன் இய்றைகை அழித்து தனக்கே அழிவைத் தேடிக் கொண்டிருக்கிறான். மத்திய மாநில அரசுகளின் துணையோடு.

எது எப்படியோ நதிக்கரை நாகீரிகத்தின் அடையாளமாக இந்த நாளை நினைத்து நல்ல எண்ணங்களை இந்த ஆடி பதினெட்டில் பெருக்கிக் கொள்வோம்.

Share

Filed under: Tamil

Trackback Uri