16 Apr 11

என்னவாகும் தமிழக தேர்தல் முடிவுகள், தலைவர்களும், தொண்டர்களும்,தமிழக வாக்காளர்களும், ஆவலோடு, ஆர்வத்தோடு, பரபரப்போடு, பதட்டத்தோடு, கொதிப்போடு காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

தங்கள் விருப்பத்தையெல்லாம் ` இப்படித்தான் இருக்கும் தேர்தல் முடிவுகள் ‘ அன்று ஆருடம் சொல்லி தங்களை தாங்களே தேற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

மாறும் என்பது நம்பிக்கை

மாறாது என்பது எதிர்பார்ப்பு.

இரண்டும்தான் தமிழகத்தில் இப்போது வலம் வந்து கொண்டிருக்கிறது.

அடித்ததை பாதுகாக்க வேண்டும் என்பது நம்பிக்கை

இனியும் அடிக்கவிடக்கூடாது என்பது எதிர்பார்ப்பு.

`மாற்றம் என்பது மானிட தத்துவம்

  மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்.’

என்றார் கவியரசு கண்ணதாசன்.

நானும் அதை அறிவேன். 1967 ஆண்டில் தமிழகத்தில் பதிவான் வாக்குகள் 76 சதவீதத்திற்கு மேல்.  அதற்குப் பிறகு இப்போதுதான் 78 ஐ தொட்டிருக்கிறது.

`இவர்கள் இருந்துவிட்டு போகட்டுமே’ என்று மக்கள் நினைத்திருந்தால், மக்கள் விட்டிலேயே இருந்திருப்பார்கள். வெளியே வந்திருக்கமாட்டார்கள்.

வெளியே மாசு படிந்த சூழல் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. `மாசு கட்டுப்பாட்டு வாரியம்’ மாதிரி மக்கள் வெளியே கிளம்பி வந்திருக்கிறார்கள்.

இந்த எழச்சியின் விளைவுகள் என்னவாகும் இருக்கும் என்பது தலைவர்களுக்குத் தெரியும். மேலே சொன்ன எதிர்பார்ப்பு, நம்பிக்கை அணியின் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

எதிர்ப்பார்ப்பு ஏமாற்றிவிடும்.

நம்பிக்கை வீண்போகாது. காரணம் நான் மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்.

Share

No related posts.


Filed under: Tamil

Trackback Uri



Leave a Comment